முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 828 பேருக்கு கரோனா; 9 பேர் பலி

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 828   பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 9 பேர் உயிரிழந்தனர். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:33 AM
பகிர்:

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 828   பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 9 பேர் உயிரிழந்தனர். 

தமிழகத்தில் நேற்று 835 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று 828 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத் துறை புதன்கிழமை (நவ.10) வெளியிட்டுள்ள அறிக்கையில்,  புதிதாக 828 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை மொத்தமாக பாதிக்கப்படோர் எண்ணிக்கை 27,11,584-ஆக அதிகரித்துள்ளது.

ஒருநாளில் மட்டும் 9 பேர் உயிரிழந்ததால், இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,247-ஆக உயர்ந்துள்ளது.

கரோனாவிலிருந்து 931 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 26,65,178-ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரு நாளில் மட்டும் 1,01,143 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →