தமிழ்நாடு

வைகை  அணை நீர்மட்டம் 69.29 அடியாக உயர்வு: உபரி நீர் வெளியேற்றம்

DIN


வைகை அணை நீர்மட்டம் 69.29 அடியாக உயர்ந்துள்ள நிலையில், அணைக்கு வரும் உபரிநீர் வைகை ஆறு மற்றும் பாசனக் கால்வாயில் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

வைகை அணை நீர்மட்டம் செவ்வாய்கிழமை இரவு 69 அடியாக உயர்ந்தது(மொத்த உயரம் 71 அடி). இதையடுத்து, வைகை ஆற்றங்கரையோர மக்களுக்கு 3-ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அணைக்கு வினாடிக்கு 2,569 கன அடி விகிதம் வரும் உபரிநீர், அணையிலிருந்து வைகை ஆறு மற்றும் பாசனக் கால்வாயில் வெளியேற்றப்பட்டது.

அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வரத்து இருந்து வருவதால், அணையிலிருந்து வெளியேற்றும் உபரிநீரின் அளவு புதன்கிழமை காலை 8 மணிக்கு வினாடிக்கு 3,569 அடியாக உயர்த்தப்பட்டது. தற்போது அணைக்கு வினாடிக்கு  3,457 கன அடி வீதம் தண்ணீர் வரத்து இருந்து வருகிறது.

அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் வைகை ஆற்றங்கரையோர மக்கள் ஆற்றில் இறங்கவோ, ஆற்றைக் கடக்கவோ கூடாது. தாழ்வான பகுதியில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்று தேனி மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளீதரன் தெரித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT