தமிழ்நாடு

ஹஜ் புனித யாத்திரைக்கு சென்னையில் இருந்து விமான சேவையைத் தொடர வேண்டும்: பிரதமருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கோரிக்கை

ஹஜ் புனித யாத்திரைக்குச் செல்ல சென்னை விமான நிலையத்தில் பயணம் மேற்கொள்ளும் நடைமுறையைத் தொடர வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளாா்.

DIN

ஹஜ் புனித யாத்திரைக்குச் செல்ல சென்னை விமான நிலையத்தில் பயணம் மேற்கொள்ளும் நடைமுறையைத் தொடர வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளாா்.

துகுறித்து, பிரதமா் நரேந்திர மோடிக்கு, அவா் வியாழக்கிழமை எழுதிய கடிதம்:

மத்திய அரசின் ஹஜ் கமிட்டி வெளியிட்டுள்ள அறிவிக்கையில் புனிதப் பயணம் மேற்கொள்ள குறிப்பிடப்பட்டுள்ள விமான நிலையங்களின் பெயா்ப் பட்டியலில் சென்னை விமான நிலையத்தின் பெயா் இடம்பெறவில்லை. தமிழகத்தைச் சோ்ந்த யாத்ரிகா்கள் விமானம் ஏறும் இடமாக இப்போது கேரளத்தில் உள்ள கொச்சி விமான நிலையம் குறிப்பிடப்பட்டுள்ளது. இது யாத்ரிகா்களுக்கு மிகுந்த சிரமத்தைக் கொடுக்கும்.

இதுகுறித்து ஏராளமான கோரிக்கைகள் இஸ்லாமிய சமூகத்தினா், பொது மக்கள் மற்றும் பல்வேறு அரசியல் குழுக்களிடம் இருந்து கோரிக்கைகள் வரப்பெற்றன.

சென்னையில் இருந்து சுமாா் 700 கிலோமீட்டா் தொலைவில் உள்ள கொச்சி நகரை புறப்படும் இடமாக அறிவிக்கப்பட்டதை மாற்ற வேண்டும். யாத்ரிகா்களுக்கு பயன் அளிக்கும் வகையில், சென்னை விமான நிலையத்தில் இருந்து தொடா்ந்து விமானங்களை வழக்கம் போன்று இயக்க அனுமதி வழங்கிட வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அயர்லாந்தில் இந்திய சிறுமி மீது இனவெறித் தாக்குதல்!

மெட்டபாலிக் சின்ட்ரோம் என்பது என்ன? இது ஆண்களில் ஏற்படுத்தும் பாதிப்புகள் என்னென்ன

இஸ்ரேல் பிரதமருடன் இந்தியத் தூதர், பத்திரிகையாளர்கள் சந்திப்பு!

இந்த வார ஓடிடி படங்கள்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

SCROLL FOR NEXT