சீர்காழி நாகை மேல வீதியில் இடிந்து விழுந்த பழனி வீட்டின் பக்கவாட்டு சுவர். 
தமிழ்நாடு

சீர்காழியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து கல்லூரி மாணவன் காயம்

தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், சீர்காழியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து கல்லூரி மாணவன் ஒருவர் காயமடைந்தார். 

DIN

சீர்காழி: தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், சீர்காழியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து கல்லூரி மாணவன் ஒருவர் காயமடைந்தார். 

வடகிழக்கு பருவமழை கடந்த 28 ஆம் தேதி இரவு தொடங்கியது. இது தீவிரமடைந்து  தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது. கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் சீர்காழி பகுதியில் தாழ்வான பல்வேறு இடங்களில் குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

இதனிடையே சீர்காழி நாகேஸ்வரமுடையார் கோயில் அருகிலுள்ள நாகை மேல வீதியைச் சேர்ந்தவர் பழனி. இவரது மகன் சூர்யகுமார் (16). பாலிடெக்னிக் மாணவர். நேற்று வியாழக்கிழமை இரவு சூர்யகுமார் வீட்டின் கழிப்பறையில் இருந்த போது பக்கவாட்டு சுற்று சுவர் இடிந்து விழுந்தது. இதில்  காயம் அடைந்த சூர்யகுமாரை மீட்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமணையில் சிகிச்சைகாக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

600 பேருக்கு வேலைவாய்ப்பு! வேலூரில் மினி டைடல் பூங்கா திறப்பு!

ஆஷஸ் தொடருக்கான ஆஸி. அணி அறிவிப்பு! கேப்டனாக ஸ்மித்.. மீண்டும் மார்னஸ் லபுஷேனுக்கு வாய்ப்பு!

பிக் பாஸ் 9 நேரலையும் எடிட் செய்யப்படுகிறதா?

பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜேன் ஏஜேபி கட்சியில் இணைந்தார்!

வேல் இருந்தால், ஒளியுண்டு... சாக்‌ஷி அகர்வால்!

SCROLL FOR NEXT