தமிழ்நாடு

பயிர் சேதமா?: விவசாயிகளுக்காக ஹெக்டேருக்கு ரூ.20,000 இழப்பீடு

DIN

மழையால் சேதமடைந்த குறுவை உள்ளிட்ட பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ. 20 ஆயிரம் இழப்பீடாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மேலும், சம்பா பருவத்தில் நடவு செய்து, நீரில் மூழ்கி சேதமடைந்த பயிர்களின் மறு சாகுபடிக்கு விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 6 ஆயிரத்து 38 ரூபாய் மதிப்பீட்டில் இருபொருள்கள் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

பருவமழையையொட்டி ஏராளமான விவசாய நிலப் பகுதிகள் வெள்ளத்தால் சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள்.

இதற்கு தீர்வு காணும் வகையில், அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்க குழு அமைக்கப்பட்டது.

இந்தக் கூழு தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டு நீரில் மூழ்கிய பயிர்களைப் பார்வையிட்டு, பயிர் பாதிப்பு நிலவரம் குறித்து கள ஆய்வு மேற்கொண்டு, பின்னர் விவசாயிகளைச் சந்தித்து அவர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தனர். 

அவர்களது கருத்துகள் அடங்கிய அறிக்கையை முதல்வரிடமும் அவர்கள் சமர்ப்பித்தனர். அதன் அடிப்படையில் விவசாயிகளுக்கு இழப்பீடும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதாவது, அறுவடைக்குத் தயாராக இருந்த குறுவை- கார்- சொர்ணவாரிப் பயிர்கள், முழுமையாக சேதமடைந்த இனங்களில் விவசாயிகளுக்கு இழப்பீடாக, ஹெக்டேர் ஒன்றுக்கு ரூபாய் 20 ஆயிரம் வழங்கப்படும்

நடப்பு சம்பா பருவத்தில் நடவு செய்து, நீரில் மூழ்கி சேதமடைந்த பயிர்களை மறு சாகுபடி செய்திட ஏதுவாக, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 6 ஆயிரத்து 38 ரூபாய் மதிப்பீட்டில் இடுபொருள்கள் வழங்கப்படும்.

இடுபொருள்களும், ரூபாயும்:

1. குறுகியகால விதை நெல் - 45 கிலோ, மறு சாகுபடி செய்திட ரூ.1,485

2. நுண்ணூட்ட உரம் – 25 கிலோ, மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களில் மஞ்சள் நோயைத் தடுத்திட ரூ.1,235

3. யூரியா – 60  கிலோ    தழைச்சத்து கிடைத்திட ரூ.354

4. டிஏபி (DAP) உரம் 125 கிலோ,    தழைச்சத்து மற்றும் மணிச்சத்து கிடைத்திட    ரூ.2,964  என மொத்தம்    6,038 வழங்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT