அயோத்தியாப்பட்டணம் சுக்கம்பட்டி கிராமத்தில் நிரம்பி வழியும்  விவசாயக் கிணறு. 
தமிழ்நாடு

கண்கொள்ளாக் காட்சி: பெருமழையால் அயோத்தியாப்பட்டணம் பகுதியில் நிரம்பி வழியும் கிணறுகள்

சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் பகுதியில் ஏற்காடு, சேர்வராயன் மலை அடிவார கிராமங்களில் 5 ஆண்டுகளுக்கு பின், பலத்த மழை பெய்ததால்,  நீர்மட்டம் உயர்ந்து வறண்டு கிடந்த விவசாய கிணறுகள் நிரம்பி வழிந்து வர

DIN


வாழப்பாடி: சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் பகுதியில் ஏற்காடு, சேர்வராயன் மலை அடிவார கிராமங்களில் 5 ஆண்டுகளுக்கு பின், பலத்த மழை பெய்ததால்,  நீர்மட்டம் உயர்ந்து வறண்டு கிடந்த விவசாய கிணறுகள் நிரம்பி வழிந்து வருகின்றன.

ஒன்றியத்திற்கு உட்பட்ட மேட்டுப்பட்டி தாதனூர், சுக்கம்பட்டி, பூவனூர், குப்பனூர், வலசையூர், வளையக்காரனூர், கற்பகம், டி.பெருமாபாளையம் உள்ளிட்ட கிராமங்கள், ஏற்காடு சேர்வராயன் மலையடிவாரத்தில் அமைந்துள்ளன. 

5 ஆண்டுகளுக்கு பின், நிகழாண்டு இப்பகுதியில் பலத்த மழை பெய்ததால், சேர்வராயன் மலைப்பகுதியில் இருந்து நீரோடைகளில் மழை வெள்ளம் வழிந்தோடி வந்தது. இதனால், குப்பனூர் பகுதியில் மண் சரிவு ஏற்பட்டதோடு, ஏராளமான விவசாயிகளின் பயிர்களும் நீரில் மூழ்கி சேதமடைந்தன. 

தொடர்மழையால் நீரோடைகளில் நீர்வரத்து அதிகரித்து  நீர்நிலைகள் நிரம்பி வருவதால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து தரை மட்டத்திற்கு மேலோங்கியுள்ளது. இதனால் இப்பகுதியில் வறண்டு கிடந்த ஏராளமான விவசாய கிணறுகளில் நீர் செறிவு ஏற்பட்டு நிரம்பி வழிகின்றன. நீச்சல் குளங்களைப்போல காணப்படும் இந்த கிணறுகளில் கிராமப்புற சிறுவர், சிறுமியர் குதித்து நீச்சல் கற்று வருகின்றனர். 5 ஆண்டுகளுக்கு பிறகு விவசாய கிணறுகள் நிரம்பி வழிவதால், இரு போக சாகுபடிக்கும் தட்டுப்பாடின்றி தண்ணீர் பாசனம் கிடைக்குமென,   இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

காா் விபத்து: ஐயப்பப் பக்தா் உயிரிழப்பு

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

புத்தொளி... ஸ்ரீலீலா!

சாலை பணியாளா்கள் நூதன ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT