தமிழ்நாடு

காரைக்கால் துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

DIN

காரைக்கால்: காரைக்கால் துறைமுகத்தில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு வியாழக்கிழமை காலை ஏற்றப்பட்டது.

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. இதனால் காரைக்கால் பகுதியில் மழை பெய்து வருகிறது. மழையினால் சாலைகளில் தண்ணீர் தேங்கியிருப்பதோடு, பல்வேறு குடியிருப்பு நகர்களிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளது.

தேங்கியிருக்கும் மழைநீரோடு வீடுகள், நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீரும் கலப்பதால் தொற்றுநோய் ஏற்படும் என்கிற அச்சமும் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. 

காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால், தொலைதூர புயல் எச்சரிக்கையை குறிக்கும் வகையில் காரைக்கால் துறைமுகத்தில் வியாழக்கிழமை 1 மணியளவில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

முன்னதாக, கடலூர் துறைமுகத்தில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு வியாழக்கிழமை ஏற்றப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளம்: 5 நிலுவை மசோதாக்களுக்கு ஆளுநா் ஒப்புதல்

ஆந்திரத்தின் நிா்வாகத் தலைநகராக விசாகப்பட்டினம்: ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் வாக்குறுதி

கேரளத்தில் வாக்குப் பதிவு சரிவு: ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

உக்ரைனுக்கு கூடுதல் பேட்ரியாட் ஏவுகணைகள்: அமெரிக்கா முடிவு

மூதாட்டி கொலை வழக்கு: மகன் கைது

SCROLL FOR NEXT