முகப்பு
தமிழ்நாடு

வேலூரில் வீடு இடிந்து 9 பேர் பலி: இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்

வேலூரில் வீடு இடிந்து 9 பேர் பலியான சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

வேலூரில் வீடு இடிந்து 9 பேர் பலியான சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில், வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு மசூதி தெருவில், வீடு இடிந்து விழுந்ததில் 4 குழந்தைகள், 5 பெண்கள் என 9 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்தேன். அவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் என்று அரசு நிவாரணத்தை உயர்த்தி வழங்குவதோடு குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 
முழு கட்டுரையைப் படிக்க →