தமிழ்நாடு

வெள்ள சேதங்களை ஆய்வு செய்ய தமிழகம் வரும் மத்திய குழு

DIN

தமிழகத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள சேதங்களை ஆய்வு செய்வதற்காக மத்திய அரசின் ஆய்வுக் குழு நவம்பர் 21ஆம் தேதி வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. வங்கக் கடலில் மையம் கொண்ட காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகம் நல்ல மழைப்பொழிவை சந்தித்துள்ளது. 

அக்டோபர், நவம்பர் மாதங்களில் பெய்த தொடர் மழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் விவசாய நிலங்களில் வெள்ளம் புகுந்தது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, வேலூர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் கடுமையான வெள்ள பாதிப்பை சந்தித்துள்ளன.

இந்நிலையில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளைக் கணக்கிடுவதற்காக மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலா் ராஜீவ் சா்மா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழு நவம்பர் 21ஆம் தேதி தமிழகத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. 6 பேர் கொண்ட இந்தக் குழுவானது தமிழக்த்தில் நடப்பாண்டு வெள்ளப் பெருக்கால் ஏற்பட்ட பாதிப்புகளை மதிப்பிடவும், கூடுதல் நிவாரண உதவிகளை அளிப்பதற்காக பரிந்துரைகளை அளிக்கவும்

தமிழகத்தில் நிகழாண்டின் போது வெள்ளப் பாதிப்பு மற்றும் மாநில நிா்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ள நிவாரணப் பணிகளை மதிப்பிட்டு, கூடுதல் மத்திய நிதியுதவியை அனுமதிப்பதற்கான இறுதி பரிந்துரைகளை அளிக்கவும் நேரில் பார்வையிட்டு அறிக்கை அளிக்க உள்ளனர்.

மத்திய குழுவின் ஆய்வுக்கு பின் இறுதி மதிப்பீட்டு அறிக்கையை உள்துறை அமைச்சகத்தின் பேரிடா் மேலாண்மை கோட்டத்திடம் ஒரு வாரத்திற்குள் அளிக்கபடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

SCROLL FOR NEXT