முகப்பு
தமிழ்நாடு

கிருஷ்ணகிரி அருகே சாலை விபத்து: திருமணமான ஒரே நாளில் மாப்பிள்ளை பலி

கிருஷ்ணகிரி அருகே இன்று அதிகாலை நேரிட்ட சாலை விபத்தில் திருமணமான ஒரே நாளில் பெங்களூருவைச் சேர்ந்த மாப்பிள்ளை உயிரிழந்தார்.

Updated On : 23 நவம்பர், 2021 at 2:46 PM
சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுண்டம்பட்டி அருகே சாலையோரத்தில் நின்றிருந்த லாரியின் பின் பகுதியில் கார் மோதியது.
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:01 AM


கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே இன்று அதிகாலை நேரிட்ட சாலை விபத்தில் திருமணமான ஒரே நாளில் பெங்களூருவைச் சேர்ந்த மாப்பிள்ளை உயிரிழந்தார்.

கர்நாடக மாநிலம் பெங்களூரு, ராமமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் சீனிவாசலு (38). இவர் ஒரு காரில் பெங்களூருவிலிருந்து சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். இவருடன் கனிமொழி (32), சுமலதா (30), ரிஷிகா (21), ஆகியோர் பயணம் செய்தனர்.

இவர்கள் கிருஷ்ணகிரியை கடந்து சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுண்டம்பட்டி அருகே சென்று கொண்டிருந்த போது கார் நிலைதடுமாறி சாலையோரத்தில் நின்றிருந்த லாரியின் பின் பகுதியில் மோதியது.

இந்த விபத்தில் சீனிவாசலு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த கனிமொழி, சுமலதா, ரிஷிகா ஆகிய 3 பேரும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த சீனிவாசலுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை தான் திருமணம் நடைபெற்றது என காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த சாலை விபத்து குறித்து கந்திகுப்பம் காவலர்கள் விசாரணை செய்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.