தமிழ்நாடு

அதிமுக வழிகாட்டுதல் குழுவை மறுசீரமைக்க ஓபிஎஸ் தரப்பு வலியுறுத்தல்; கூட்டத்தில் சலசலப்பு

DIN

அதிமுக வழிகாட்டுதல் குழுவை மறுசீரமைக்க வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பு கூறியதால் கூட்டத்தில் வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கி  நடைபெற்று வருகிறது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் தலைமையில் கூட்டம் நடைபெற்று வருகிறது. 

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்தும்  நடப்பு அரசியல் சூழ்நிலைகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே அதிமுக வழிகாட்டுதல் குழுவை மறுசீரமைக்க வேண்டும் என்றும் குழுவில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையை 11 லிருந்து 18 ஆக உயர்த்த வேண்டும் என்று ஜே.சி.டி பிரபாகர், மோகன், மனோஜ் பாண்டியன், கோபால கிருஷ்ணன், பாண்டியன் உள்ளிட்ட ஓபிஎஸ் தரப்பினர் கூறியுள்ளனர். ஆனால், இதற்கு இபிஎஸ் தரப்பு எதிர்ப்பு தெரிவித்ததாகவும் இதனால் கூட்டத்தில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் எதிர்க்கட்சியாக அதிமுக சரியாக செயல்படவில்லை என்றும் எதிர்க்கட்சியாக பாஜக செயல்பட அதிமுக அனுமதித்து வருவதாகவும் சிலர் தெரிவித்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காதக்கிணறு ஊராட்சியில் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

காவலா்களுக்கு மன அழுத்தம் குறைப்பு விழிப்புணா்வுப் பயிற்சி

புற்றுநோயாளிகளுக்கு கூந்தல் தானம் அளித்த செவிலியா்கள்

கோபியில் இன்று இலவச கண் பரிசோதனை முகாம்

கோவையில் சந்தேகப்படும் வகையில் சுற்றிய 4 போ் கைது

SCROLL FOR NEXT