தமிழ்நாடு

நாளை(நவ.25) 11-வது மெகா கரோனா தடுப்பூசி முகாம்; 50,000 மையங்கள் ஏற்பாடு

DIN

தமிழகத்தில் 11-வது மெகா கரோனா தடுப்பூசி முகாம் நாளை(நவ.25) நடைபெற உள்ளது. இதில், இரண்டாவது டோஸ் போட்டுக்கொள்ளாதவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

கரோனா தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ள தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. அந்தவகையில் தமிழக அரசு தற்போது வாரத்திற்கு இருமுறை மெகா தடுப்பூசி முகாம் நடத்துகிறது. இதில் தங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள முகாம்களிலேயே தடுப்பூசி செலுத்த மக்களுக்கு வசதியாக உள்ளது. 

இந்நிலையில், தமிழகத்தில் 11-வது மெகா கரோனா தடுப்பூசி முகாம் நாளை(நவ.25) நடைபெற உள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் சுமார் 50,000 தடுப்பூசி மையங்கள் அமைக்கப்படுகின்றன. சென்னையில் 1,600 தடுப்பூசி முகாம்கள் செயல்படும். 

மெகா தடுப்பூசி முகாம்களுக்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். 

தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் உடனடியாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும் 2-வது டோஸை செலுத்தாதவர்கள் கண்டிப்பாக தடுப்பூசி முகாம்களை பயன்படுத்தி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியன் - 2 வெளியீட்டுத் தேதி இதுதானா?

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

தில்லி அரசு - ஆளுநர் இடையே மீண்டும் மோதல்: மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்கள் நீக்கம்!

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT