தமிழ்நாடு

அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் மகா ஜென்மாஷ்டமி சிறப்பு வழிபாடு

DIN

அவிநாசி: அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் மகா ஜென்மாஷ்டமியை முன்னிட்டு கால பைரவருக்கு சனிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றறன.

கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் முதன்மை பெற்றதும், முதலை விழுங்கிய சிறுவனை சுந்தரமூர்த்தி நாயனார், தேவார திருப்பதிகம் பாடி மீண்டும் உயிர்ப்பித்து எழச்செய்த திருத்தலமாகவும், கருணாம்பிகையம்மன் உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் திருத்தலம் விளங்குகிறது.

மேலும், கோயிலில் உள்ள பைரவர், ஆகாச காசிகா புராதன பைரவர் என்று அழைக்கப்படுகிறார். காசியில் உள்ள பைரவருக்கு முற்பட்டவர் என்பது சிறப்புக்குரியது.

இவருக்கு மாதம் தோறும் தேய்பிறை அஷ்டமியில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். குறிப்பாக கார்த்திகை மாதம் பைரவருக்குரிய ஜென்மாஷ்டமி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த ஜென்மாஷ்டமியை முன்னிட்டு கால பைரவருக்கு சிறப்பு ஹோமம் சனிக்கிழமை காலை நடைபெற்றது.  இதைத்தொடர்ந்து, 16 வகையான திரவிய அபிஷேகம், சிறப்பு அலங்காரம், ஷோடச உபராசங்களுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.

இதில் கால பைரவருக்கு  வடை மாலை சாத்தப்பட்டது. இதையடுத்து, கால பைரவர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பிரகார உலா நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT