முகப்பு
தமிழ்நாடு

'அனைவரும் தவறாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்'

கரோனாவிலிருந்து பாதுகாத்துக்கொள்ள அனைவரும் தவறாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:35 AM
பகிர்:

கரோனாவிலிருந்து பாதுகாத்துக்கொள்ள அனைவரும் தவறாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கட்டுப்பாடுகளுடன் ஊரங்கை நீட்டிப்பது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தடுப்பூசி செலுத்திக்கொள்வதன் அவசியம் குறித்தும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அதில், தடுப்பூசி செலுத்திக் கொண்டாலும் கூட, கரோனா மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நடைமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி, பொது இடங்களில் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியினை கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு / கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது ஆகியவற்றை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். 

நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன், பொதுமக்கள் உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை/ சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.

மக்கள்  அனைவரும் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி கரோனா தொற்றினை முற்றிலும் அகற்ற உதவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →