நாமக்கல் பூங்கா சாலையில் வியாழக்கிழமை நடைபெற்ற பாஜக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற முன்னாள் எம்பி கே.பி.ராமலிங்கம்,  பஜக மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி உள்ளிட்டோர். 
தமிழ்நாடு

கோயில்களை திறக்க வலியுறுத்தி நாமக்கல்லில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஹிந்து கோயில்களை திறக்க வலியுறுத்தி நாமக்கல் பூங்கா சாலையில் சேலம், ஈரோடு, நாமக்கல் மூன்று மாவட்ட பாஜகவினர் பங்கேற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்ற

DIN

நாமக்கல்: வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஹிந்து கோயில்களை திறக்க வலியுறுத்தி நாமக்கல் பூங்கா சாலையில் சேலம், ஈரோடு, நாமக்கல் மூன்று மாவட்ட பாஜகவினர் பங்கேற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கரோனா பரவல் காரணமாக மக்களிடையே நோய் பரவலை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோயில்களை மூட உத்தரவிட்டது. மேலும் முக்கிய விழா நாள்களிலும் கோயில்கள் திறப்புக்கு அனுமதி இல்லை. 

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பாஜக தொண்டர்கள்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் 12 இடங்களில் கோயில்களை திறக்க வலியுறுத்தி வியாழக்கிழமை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

நாமக்கலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி துரைசாமி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.பி. ராமலிங்கம், மொடக்குறிச்சி எம்எல்ஏ சரஸ்வதி,  தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் சிவகாமி பரமசிவம், வழக்குரைஞர் மனோகரன், நாமக்கல் மாவட்டத் தலைவர் சத்தியமூர்த்தி, சேலம் மாநகர் மாவட்ட பார்வையாளர் கோபிநாத், மாநகர் மாவட்டத் தலைவர் சுரேஷ்பாபு, கல்வியாளர் பிரணவ்குமார் ஈரோடு கிழக்கு, மேற்கு மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

கோயில்களை திறக்க வலியுறுத்தி பல்வேறு முழக்கங்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அனுமன் ஜெயந்தி: கோவில்பட்டி கோயில்களில் சிறப்பு பூஜை

நாலாட்டின்புதூா் அருகே சாலை விபத்தில் ஓட்டுநா் உயிரிழப்பு

சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா் கொலை வழக்கு முதன்மை நீதிமன்றத்துக்கு மாற்றம்

மூத்தோா் மாநில தடகளத்தில் பங்கேற்போருக்குப் பாராட்டு

கூட்டுறவு பட்டயப் படிப்பு: பழைய பாடத்திட்டத்துக்கு பிப்ரவரியில் துணைத் தோ்வு

SCROLL FOR NEXT