திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகேயுள்ள கீழக்கருவேலன்குளம் டி.டி.டி.ஏ துவக்கப்பள்ளியில் சனிக்கிழமை வாக்களிக்க வந்த கேசவனேரியைச் சேர்ந்த மூதாட்டிகள் மூவர்.  
தமிழ்நாடு

வாக்குப்பதிவு தொடங்கிய உடனேயே வாக்குகளை செலுத்தி மக்களை வியப்பில் ஆழ்த்திய 90 வயது மூதாட்டிகள்!

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு ஊராட்சி ஒன்றிய தேர்தலில் வாக்களிப்பதற்காக 90 வயது மூதாட்டிகள் 3 பேர் காலை 8.30 மணிக்கே வந்து தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.  

சி.நா.கிருஷ்ணமாச்சாரியார்

களக்காடு: திருநெல்வேலி மாவட்டம், களக்காடு ஊராட்சி ஒன்றிய தேர்தலில் வாக்களிப்பதற்காக 90 வயது மூதாட்டிகள் 3 பேர் காலை 8.30 மணிக்கே வந்து தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.  

களக்காடு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 17 ஊராட்சித் தலைவர், 141 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 9 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், ஒரு மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கான தேர்தல் சனிக்கிழமை நடைபெறுகிறது. இதற்காக, களக்காடு ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் மொத்தம் 86 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 

களக்காடு  அருகேயுள்ள கீழக்கருவேலன்குளம் டி.டி.டி.ஏ தொடக்கப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் கேசவனேரியைச் சேர்ந்த 90 வயது மூதாட்டிகளான மீராள்பீவி, பாத்திமாள் பீவி, அசன்பாத்து ஆகிய மூன்று பேரும் காலை 8.30 மணிக்கு வந்து தங்களது வாக்குகளை செலுத்தினர். 

காலை 8 மணி முதல் மழைமேகம் சூழ்ந்து மழை பெய்வதற்கான அறிகுறிகள் தென்பட்டன. ஆனால் அதையும் பொருட்படுத்தாது 2 கி.மீ தொலைவில் உள்ள தங்களது ஊரில் இருந்து உறவினர்கள் மூலம் ஆட்டோவில் மூதாட்டிகள் வந்தனர். 

இளைஞர்களே தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றத் தவறும் பட்சத்தில் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்ற வாக்குப்பதிவு தொடங்கிய உடனேயே வந்து வாக்குகளை செலுத்தியது மக்களை வியப்பில் ஆழ்த்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராணுவ வீரருக்கு மிரட்டல் விடுத்தவா் மீது வழக்கு

கண்காணிப்பு கேமராக்களை சேதப்படுத்திய இளைஞா் கைது

இரகுநாதபுரம் கிராமத்தில் ரூ.1.22 கோடியில் சாலைப் பணி

தலைமை காவலா் இடைநீக்கம்

சாத்தூரில் குடிநீா் குழாய் உடைப்பு

SCROLL FOR NEXT