முகப்பு
தமிழ்நாடு

மானாமதுரையில் பைக் விபத்தில் பாத்திரக்கடைக்காரர் சாவு

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு பைக் விபத்தில் பாத்திரக்கடை உரிமையாளர் உயிரிழந்தார். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:20 AM
மானாமதுரையில் பைக் விபத்தில் உயிரிழந்த பாத்திரக்கடை உரிமையாளர் முத்துக்கருப்பன்.
பகிர்:


மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு பைக் விபத்தில் பாத்திரக்கடை உரிமையாளர் உயிரிழந்தார். 

மானாமதுரை புதிய பஸ் நிலையம் பின்புறம் ஆனந்தவல்லி அம்மன் நகரில் வசிப்பவர் துணைக்கொண்டு மகன் முத்துக்கருப்பன் (67), இவர் மானாமதுரை நகரில் கனராவங்கி அருகே பாத்திரக் கடை வைத்து நடத்தி வருகிறார். இரவு முத்துக்கருப்பன் கடையை அடைத்துவிட்டு தனது மகன் ஆனந்த் பிரகாஷூடன் பைக்கில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். 

புதிய பஸ் நிலையம் எதிரே அணுகு சாலையில் சென்றபோது பின்னால் மானாமதுரை ரயில்வே காலணியில் வசிக்கும் சாத்தன் மகன் முகேஷ் (16) ஓட்டி வந்த பைக் பின்பக்கமாக மோதியது. 

இந்த விபத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்த முத்துக்கருப்பன் பின்பக்க தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

முகேஷ் காயங்களுடன் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இந்த விபத்துச் சம்பவம் குறித்து மானாமதுரை நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →