மு.க.ஸ்டாலின் (கோப்புப் படம்) 
தமிழ்நாடு

பண்டிகைக்கு கோயில்கள் திறக்கப்படுமா? முதல்வர் நாளை ஆலோசனை

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள் வழங்குவது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (அக். 13) ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

DIN


தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள் வழங்குவது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (அக். 13) ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் நாளை காலை 11 மணிக்கு நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், சுகாதாரத் துறை, வருவாய் நிர்வாகத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.

தமிழகத்தில் அக்டோபர் 20-ம் தேதி வரை கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், முன்கூட்டியே இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றவுள்ளது.

இதில் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜையையொட்டி கோயில்களை திறப்பது, பண்டிகைகளையொட்டி கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எப்போது திருந்(த்)தப் போகிறோம்?

ரோஹிங்கயாக்கள் இன அழிப்பு: மியான்மருக்கு எதிராக விசாரணை தொடக்கம்!

போலி ஆவணங்கள் மூலம் வெளிநாட்டில் இருந்து திருச்சி வந்தவா் கைது

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜிஎஸ்டி சாலைப் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்

இன்று இந்தியா ஓபன் 2026 பாட்மின்டன் தொடக்கம்: 256 வீரா், வீராங்கனைகள் பங்கேற்பு!

SCROLL FOR NEXT