இளையான்குடி ஒன்றியத்தில் முப்பெரும் விழாவில் இலவச பட்டா வழங்கல்
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியம் பெரும்பச்சேரி ஊராட்சியில் நாடகமேடை, நிழற்குடை, குடிநீர் மேல்நிலை தொட்டி திறப்பு என நடைபெற்ற முப்பெரும் விழாவில் ஏழை மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்க
தமிழ்நாடுஇளையான்குடி ஒன்றியத்தில் முப்பெரும் விழாவில் இலவச பட்டா வழங்கல்
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியம் பெரும்பச்சேரி ஊராட்சியில் நாடகமேடை, நிழற்குடை, குடிநீர் மேல்நிலை தொட்டி திறப்பு என நடைபெற்ற முப்பெரும் விழாவில் ஏழை மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்க
மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியம் பெரும்பச்சேரி ஊராட்சியில் நாடகமேடை, நிழற்குடை, குடிநீர் மேல்நிலை தொட்டி திறப்பு என நடைபெற்ற முப்பெரும் விழாவில் ஏழை மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டன.
இவ்விழாவில் மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினர் தமிழரசி கலந்துகொண்டு நாடகமேடை, நிழற்குடை, மேல்நிலைத் தொட்டிகளை திறந்து வைத்தார்.
அதைத் தொடர்ந்து இளையான்குடி வட்டத்தைச் சேர்ந்த ஏழைகளுக்கு இலவச பட்டாக்கள் வழங்கப்பட்டன. சட்டப்பேரவை உறுப்பினர் தமிழரசி இலவச பட்டாக்களை வழங்கி விழாவில் சிறப்புரையாற்றினார்.
இவ்விழாவில் இளையான்குடி சட்டப்பேரவைத் தொகுதி முன்னாள் உறுப்பினர் சுப. மதியரசன், கண்ணமங்கலம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத் தலைவர் சுப.தமிழரசன், இளையான்குடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தி, சரவணன் மற்றும் வருவாய்த்துறையினர் திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.