திருச்சி: 3ஆம் நாளாக விவசாயிகள் பிச்சை எடுக்கும் போராட்டம்
திருச்சியில் 3-ஆம் நாளாக விவசாயிகள் வியாழக்கிழமை பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சியில் 3-ஆம் நாளாக விவசாயிகள் வியாழக்கிழமை பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3 புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். காவிரி, டெல்டா பகுதி நேரடி கொள்முதல் நிலையங்களில் நாளொன்றுக்கு 5 ஆயிரம் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும். மழையில் நனைந்து அழிந்து வரும் நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும். விளைபொருள்களுக்கு இருமடங்கு விலை நிா்ணயிக்க வேண்டும். லக்கிம்பூா் சம்பவத்துக்கு காரணமானோருக்கு கடும் தண்டனை அளிக்க வேண்டும் ஆகியவற்றை வலியுறுத்தி திருச்சியில் 46 நாள் தொடா் உண்ணாவிரதப் போராட்டம் விவசாயிகளால் தொடங்கப்பட்டுள்ளது.
3-ஆம் நாளான இன்று வியாழக்கிழமை விவசாயிகள் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சாா்பில் திருச்சி-கரூா் புறவழிச் சாலையிலுள்ள சங்க வளாகத்தில் நடைபெறும் போராட்டத்துக்கு மாநிலத் தலைவா் பி. அய்யாக்கண்ணு தலைமை வகித்தாா்.