முகப்பு
தமிழ்நாடு

ஓபிஎஸ்-இபிஎஸ் விட்டது கற்பனை அறிக்கை: கே.ஆர்.பெரியகருப்பன் கண்டனம்

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் தொடர்பாக எடப்பாடி கே.பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியிட்ட அறிக்கைக்கு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

Updated On : 11 பிப்ரவரி, 2024 at 11:56 AM
கோப்புப் படம்
பகிர்:

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் தொடர்பாக எடப்பாடி கே.பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியிட்ட அறிக்கைக்கு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடந்துமுடிந்த 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தலில் திமுக மகத்தான வெற்றியை பெற்றுள்ளது. 

தமிழக மக்கள் அதிமுகவுக்கு கொடுத்த படுதோல்வியை மறைத்து தேர்தலை நேர்மையாக நடத்திய தேர்தல் ஆணையத்தை கொச்சைப்படுத்திய கற்பனை அறிக்கைக்குக் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

கடந்த 2016 ல் நடக்க வேண்டிய உள்ளாட்சித் தேர்தலை மூன்று வருடம் தள்ளிப் போட்டது அதிமுக அரசு. 

’தேர்தல் அறிவிப்பு ஆளுங்கட்சிக்கு மட்டுமே தெரிந்திருக்கிறது’ என்று உயர்நீதிமன்றம் கண்டனம் செய்து தேர்தல் அறிவிப்பையே ரத்து செய்யும் நிலைக்கு தள்ளியது அதிமுக அரசு.

உரிய காலத்தில் தேர்தலை நடத்தாமல்- மாநிலத் தேர்தல் ஆணையரையே நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உயர்நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்க வைத்தது அதிமுக அரசு.

உள்ளாட்சித் தேர்தலை வேண்டுமென்றே  தாமதம் செய்தது அதிமுக அரசு.

பிறகு மாவட்டங்களைப் பிரித்து உள்ளாட்சித் தேர்தல் நடத்த விடாமல் செய்தது அதிமுக அரசு. பிறகு ஊரக உள்ளாட்சித் தேர்தல் - நகர்ப்புறத் தேர்தல் எனப் பிரித்து - முதலில் ஊரக உள்ளாட்சித் தேர்தலை அதுவும் உச்சநீதிமன்றத்தின் கண்டனத்தில் இருந்து தப்பிக்க அறிவித்தது அதிமுக அரசு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →