வாலாஜா ஸ்ரீசங்கர மடத்தில் நவராத்திரி விழாவை ஒட்டி மாணவர்களுக்கு சரஸ்வதி படம் மற்றும் எழுதுபொருள்கள் வழங்கி ஆசி வழங்கப்பட்டது. 
தமிழ்நாடு

வாலாஜா ஸ்ரீசங்கர மடத்தில் நவராத்திரி விழா: மாணவர்களுக்கு சரஸ்வதி படம், எழுதுபொருள்கள் வழங்கி ஆசி

வாலாஜா ஸ்ரீசங்கர மடத்தில் நவராத்திரி விழாவை ஒட்டி மாணவர்களுக்கு சரஸ்வதி படம் மற்றும் எழுதுபொருள்கள் வழங்கி ஆசி வழங்கப்பட்டது. 

DIN

வாலாஜா ஸ்ரீசங்கர மடத்தில் நவராத்திரி விழாவை ஒட்டி மாணவர்களுக்கு சரஸ்வதி படம் மற்றும் எழுதுபொருள்கள் வழங்கி ஆசி வழங்கப்பட்டது. 

வாலாஜாபேட்டை ஸ்ரீ சங்கரமடத்தில் நவராத்திரி விழா காஞ்சி சங்கர மடம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய சுவாமிகள் ஆசியுடன் கடந்த ஆறாம் தேதி கோயில் வளாகத்தில் கொலு வைத்து துவங்கப்பட்டது. 

அன்றைய தினம் சௌந்தரிய லஹரி, லலிதா சகஸ்ர பாராயணமும், வேத பாராயணமும், ஸ்ரீசுவாசினி பூஜை செய்து 51 சுமங்கலிகளுக்கு புடவை மங்கலப் பொருள்கள் வழங்கப்பட்டன. 

இதையும் படிக்க | சரஸ்வதி பூஜை: சேலத்தில் ஆலயங்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சி

அன்றிலிருந்து சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஓய்வுபெற்ற ஆசிரியை வேம்பு ராஜம் அவர்களால் பக்தி பாடல்கள் பயிற்றுவிக்கப்பட்டது. 

இதையடுத்து பக்தி பாடல் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கும் விழா வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. 

இந்த விழாவில் ஐயப்ப சேவா சமாஜம் மாநில செயலாளர் சுதாகர், ராணிப்பேட்டை பெ.பாபு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கினார். 

இதையடுத்து அன்னதானத் திட்டத்தின் மூலம் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. 

இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை வாலாஜா ஸ்ரீ ஆதிசங்கரர் சாரிடபிள் டிரஸ்ட் நிர்வாகிகள் சுந்தரேசன், ராஜசேகரன், ரவி காந்தன், பெல். பார்த்திபன், குணசேகரன் கரன் சிங் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“படங்கள் வெற்றிகளைத் தாண்டி,அந்த சந்தோசம் வேற மாதிரி!” நடிகர் சூர்யா நெகிழ்ச்சி

அரசை விமர்சித்தால் 7 ஆண்டு சிறை? -மகாராஷ்டிர முதல்வர் விளக்கம்

குழந்தை இல்லாதவர்களுக்கு கடைசி வாய்ப்பா IVF சிகிச்சை முறை? | மருத்துவர் ஆலோசனைகள்!

தஞ்சாவூர் அருகே மின்சாரம் பாய்ந்து கணவன்-மனைவி பலி

மேரிலிண் மன்ரோ லுக்... ஓவியா!

SCROLL FOR NEXT