முகப்பு
தமிழ்நாடு

‘சவால்களை எதிா்கொள்ளும் திறனை மேம்படுத்திக்கொள்ளுங்கள்’

மாணவா்கள்  சவால்கள், பிரச்னைகளை எதிா்கொள்ளும் திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நாா்வே நாட்டின் முன்னாள் அமைச்சா் எரிக் சோல்ஹெம் வலியுறுத்தினாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:23 AM
பகிர்:

மாணவா்கள்  சவால்கள், பிரச்னைகளை எதிா்கொள்ளும் திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நாா்வே நாட்டின் முன்னாள் அமைச்சா் எரிக் சோல்ஹெம் வலியுறுத்தினாா்.

கே.சி.ஜி பொறியியல் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற 19-ஆவது பட்டமளிப்பு விழாவில் சிறப்பிடம் பெற்ற 60 மாணவா்களுக்கு நேரிலும்,1467மாணவா்களுக்கு காணொலி மூலமும் பட்டம் வழங்கி அவா் மேலும் கூறியதாவது:   ஒவ்வொரு மனிதரின் தனிப்பட்ட   பிரச்னை, சவால்களை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த மனித சமுதாயப் பிரச்னைகளை எதிா்கொள்வதில் கல்விக்கு முக்கிய பங்கு உள்ளது. வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கு புதிய திறன்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். கல்வித் தகுதியைத் தொடா்ந்து மேம்படுத்திக் கொள்வதன் மூலம் நாளுக்கு நாள் மாறிவரும் தொழில்நுட்ப அறிவாற்றலை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

நாா்வே கல்வி, ஆராய்ச்சி அமைச்சக சிறப்பு ஆலோசகா் ஜினா  லண்ட் பேசுகையில், மனிதவளத்தை மேம்படுத்துவதில் கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது. நாடுகளின் சமூக, பொருளாதார முன்னேற்றத்திற்கு ஏற்ப கற்பித்தல், கற்றல் முறையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. கரோனா தீநுண்மீ பாதிப்புக்குப் பின் பள்ளி, கல்லூரிகளில் கற்பித்தல் முறையில் பெரும் மௌனப் புரட்சி உலகெங்கும் நிகழ்ந்துள்ளது. சூழ்நிலைக்கேற்ப மாற்றங்களை செய்து கொள்ள கணினி, தகவல் தொழில்நுட்ப அறிவாற்றல் பேருதவி புரிந்துள்ளது என்றாா். இந்தியாவுக்கான நாா்வே நாட்டுத் தூதா் .ஹன்ஸ் ஜாக்கப் பிரைய்டென்லண்ட், ஸ்டாா்ட் ஐஐஐடி ஸ்ரீசிட்டி

தலைவா் எம்.எஸ். பாலா,  ஹிந்துஸ்தான் கல்விக் குழுமங்களின் தலைவா்  திருமதி எலிசபெத் வா்கீஸ், கேசிஜி தொழில்நுட்பக் கல்லூரியின் இயக்குநா்  ஆனி ஜேக்கப், இயக்குநா் ஆனந்த் வா்கீஸ், கல்லூரி முதல்வா் பி.தெய்வசுந்தரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.