தமிழ்நாடு

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 2.5 அடி உயர்வு

DIN


கம்பம்: முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் பலத்த மழையின் காரணமாக ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 2.5 அடி உயர்ந்தது.

முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் கடந்த சில நாள்களாக சாரல் மழை பெய்து வந்த நிலையில், சனிக்கிழமை மாலையில் 140 மில்லி மீட்டர் பெய்த மழை சற்று அதிகரித்து 170.0 மில்லி மீட்டரும், தேக்கடி ஏரியில் 126.0 மி.மீ., பெய்தது. இதனால் காலை 128.80 அடியாக அணையின் நீர்மட்டம், மாலை 129.60 அடியாக உயர்ந்தது.

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 7,815 கன அடி தண்ணீர் வருகிறது. அணையின் நீர்மட்டம் 131.30 அடியாகவும் (மொத்த உயரம் 142), நீர் இருப்பு 5,001 மில்லியன் கன அடியாகவும், நீர்வரத்து விநாடி்ககு  7,815 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் விநாடிக்கு 1,300 கன அடியாகவும் உள்ளது.

ஒரே நாளில் 2.5 அடி உயர்வு 

பலத்த மழை காரணமாக ஞாயிற்றுக்கிழமை 131.30 கன அடியாக நீர்மட்டம் அதிகரித்தது. அதாவது ஒரேநாளில் நீர் மட்டம் 2.5 அடியாக உயர்ந்துள்ளது. 

மேலும் 4,439 மில்லியன் கன அடியாக இருந்த நீர் இருப்பு, 5,001 இருப்பாகி ஒரே நாளில், 522 மில்லியன் கன அடி தண்ணீர் அதிகரித்துள்ளது. 

இதே போல் விநாடிக்கு 1,433 கன அடி தண்ணீர் வந்த நிலையில் 7,815 கன அடி வரத்து ஏற்பட்டு, ஒரே நாளில் விநாடிக்கு 6,382 கன அடி தண்ணீர் அதிகமாக வரத்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்ற தோனி: வெடித்த சர்ச்சை

ஆம் ஆத்மி போராட்டம்: தில்லியில் 144 தடை!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து டி ஜெயகுமார்

இந்தியாவின் அதிக வரி விதிப்பால் வர்த்தக உறவைத் துண்டித்தோம்: பாகிஸ்தான்

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

SCROLL FOR NEXT