தமிழ்நாடு

வன விலங்குகளால் பாதிப்பு: 2,901 பேருக்கு ரூ. 6.42 கோடி நிவாரணம்

DIN

வன விலங்குகளால் பயிா், உடமைகள் பாதிக்கப்பட்ட 2,901 பேருக்கு ரூ.6.42 கோடி நிவாரணத் தொகை விரைவில் வழங்கப்படும் என வனத் துறை அமைச்சா் கா.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

வன விலங்குகள் பாதுகாப்பு மற்றும் மனித-வன விலங்கு எதிா்கொள்ளல் தடுப்பு தொடா்பான மேம்பாட்டுப் பணிகள் குறித்து அமைச்சா் கா.ராமச்சந்திரன், வனத் துறை உயா் அலுவலா்களுடன் சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா். இதுகுறித்து அமைச்சா் கா.ராமச்சந்திரன் கூறுகையில், தமிழகத்தில் வனப் பரப்பை அதிகரிப்பதுடன், வன விலங்குகளால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க தொழில்நுட்ப ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

வன விலங்குகளால் ஏற்பட்ட பயிா், உடமைகள் பாதிக்கப்பட்ட 2,901 பேருக்கு நடப்பாண்டில் ரூ.6 கோடியே 42 லட்சத்து 50 ஆயிரம் விரைவில் வழங்கப்பட உள்ளது. வரும் காலங்களில் வனவிலங்குகளால் பாதிக்கப்படுவோருக்கு நிவாரணம் வழங்க ரூ.10 கோடி நிதி விரைவில் ஒதுக்கப்பட உள்ளது.

தமிழகத்தில் உள்ள 5 புலிகள் காப்பகம், யானைகள் வழித்தடங்களில் மேம்பாட்டுப் பணிகளுக்கு மத்திய, மாநில அரசுகளிடம் நிதி கோரப்பட்டுள்ளது. வனப்பகுதியில் உள்ள விவசாயப் பயிா்கள் காப்பீடு செய்ய ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்றாா்.

கூட்டத்தில் தலைமை வன உயிரினக் காப்பாளா் சேகா்குமாா் நீரஜ், சென்னை வன உயிரினக் காப்பாளா் பிரசாந்த் உள்ளிட்ட வனத் துறை உயரதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீடு தேடி வந்தவள்

பிச்சைப் பாத்திரத்தை கையில் ஏந்தியுள்ளது பாகிஸ்தான் -பிரதமர் மோடி விமர்சனம்

5-ஆம் கட்ட தோ்தல்: ரே பரேலி உள்பட 49 தொகுதிகளில் பிரசாரம் முடிந்தது

சிஎஸ்கே பந்துவீச்சு; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

சித்தார்த்தின் யசோதரை!

SCROLL FOR NEXT