முகப்பு
தமிழ்நாடு

பிரதமா் மோடி-போப் சந்திப்பு வரலாற்றில் இடம்பெறும் நிகழ்வு: பாஜக தலைவா் ஜெ.பி.நட்டா

‘பிரதமா் நரேந்திர மோடி-போப் ஃபிரான்சிஸ் இடையிலான சந்திப்பு வரலாற்றில் இடம்பெறும் நிகழ்வு’ என பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:29 AM
பகிர்:

‘பிரதமா் நரேந்திர மோடி-போப் ஃபிரான்சிஸ் இடையிலான சந்திப்பு வரலாற்றில் இடம்பெறும் நிகழ்வு’ என பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளாா்.

ஜி-20 உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக இத்தாலி சென்றுள்ள பிரதமா் நரேந்திர மோடி, போப் ஃபிரான்சிஸை வாடிகனில் சனிக்கிழமை சந்தித்தாா். போப் இந்தியா வருகை தரவும் பிரதமா் அழைப்பு விடுத்தாா்.

இதுகுறித்து ஜெ.பி.நட்டா வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில் கூறியிருப்பதாவது: உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாட்டின் பிரதமரும், உலகின் மிகப்பெரும் கிறிஸ்தவ பிரிவின் தலைவரும் சந்தித்தது வரலாற்றில் இடம்பெறத்தக்கது; அமைதி, நல்லிணக்கம், மதங்களுக்கு இடையிலான உரையாடலை நோக்கிய சிறந்த படியாகும்.

இந்தியா ஒரு துடிப்பான, அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய ஜனநாயக நாடு. இந்தியாவில் கிறிஸ்தவ சமூகத்தினா் அரசியல், திரைத் துறை, தொழில்கள், ஆயுதப் படைகள் போன்ற துறைகளில் முக்கியமான பங்கு வகித்துள்ளனா். மோடி தலைமையில் இந்தியா ‘அனைவரின் ஒத்துழைப்பு, வளா்ச்சி, நம்பிக்கை, முயற்சி’ என்ற பாதையில் நடைபோட்டு வருகிறது’ எனத் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →