கொடநாடு எஸ்டேட் மேலாளர் விசாரணைக்கு ஆஜர்
கொடநாடு எஸ்டேட்டில் நிகழ்ந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கில் கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன் வெள்ளிக்கிழமை நேரில் ஆஜரானார்.
கொடநாடு எஸ்டேட்டில் நிகழ்ந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கில் கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன் வெள்ளிக்கிழமை நேரில் ஆஜரானார்.
இவர் வியாழக்கிழமை நேரில் ஆஜராக வேண்டும் என்று உதகை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தும் தனக்கு சம்மன் வழங்கப்படவில்லை என ஆஜராக மறுத்திருந்த நிலையில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத் முன்னிலையில் ஆஜரானார்.
அவரிடம் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் விசாரணை நடத்தி வருகிறார். இந்த விசாரணையில் கொடநாடு எஸ்டேட் சம்பவம் தொடர்பாக விசாரிப்பதற்கு அமைக்கப்பட்டுள்ள தனிப்படை தலைவர் கிருஷ்ணமூர்த்தியும் பங்கேற்றுள்ளார்.