தமிழ்நாடு

அவிநாசி அரசு கல்லூரியில் செப்.13-ல் மூன்றாம் கட்ட கலந்தாய்வு

DIN

அவிநாசி: அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மூன்றாம் கட்ட கலந்தாய்வு செப்டம்பர் 13, 14 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ஹேமலதா, சேர்க்கை குழுத் தலைவர் முனைவர் ஹலீமாபி (எ) ஷகிலா பானு, உறுப்பினர்கள் பேராசியர்கள் அ. பாலமுருகன், செ.பாலமுருகன் ஆகியோர் கூறியதாவது: 

கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தின் அடிப்படையில் இதுவரை நிறைவு செய்யப்படாமல் உள்ள 49 இடங்களை நிரப்புவதற்காக கல்லூரி அலுவலகத்தில் செப்.6 (திங்கள்கிழமை) பிற்பகல் முதல் நேரடி விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.  அரசு இட ஒதுக்கீட்டின்படி மூன்றாம் கட்ட கலந்தாய்வு செய்வதற்காக விண்ணப்பங்களை கல்லூரி அலுவலகத்தில் பெற்று கடைசி நாளான செப்.9 ஆம் தேதி வியாழக்கிழமை வரை நேரடியாக சமர்ப்பிக்கலாம்.

இதில் பி.காம் பிரிவில் 8, பி காம் பி.ஏ பிரிவில் 9 , பி.ஏ பொருளியல் 11, பி.காம் சர்வதேச வணிகம் 9, பி.ஏ. ஆங்கிலம் பிரிவில் 10, பிஎஸ்சி கணினி அறிவியலில் ஒரு இடம், பிஎஸ்சி வேதியலில் ஒரு இடம் என மொத்தம் 49 இடங்கள் காலியாக உள்ளன. இந்த காலியிடங்களுக்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வு செப்.13, 14 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. மேலும், இதுகுறித்த விபரம் கல்லூரி இணையதளத்திலும், கல்லூரி அறிவிப்பு பலகையில் வெளியிடப்பட்டுள்ளது என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

SCROLL FOR NEXT