தமிழ்நாடு

தமிழகத்தின் புதிய ஆளுநருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள  என்.ஆர்.ரவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.  

DIN

தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள  என்.ஆர்.ரவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். 

இது தொடர்பாக அவர் வெளியிடுள்ள சுட்டுரையில், தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் ஆர்.என்.ரவிக்கு எனது வணக்கமும் வாழ்த்தும்.

தங்களது வருகை தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் வளத்துக்கும் ஊக்கமளிப்பதாக இருக்கட்டும் என்றும், தங்களை தமிழகம் வரவேற்கிறது எனவும் பதிவிட்டுள்ளார். 

மேலும், பஞ்சாப் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பன்வாரிலால் புரோஹித்துக்கும் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில், பஞ்சாப் மாநில ஆளுநராகப் பொறுப்பேற்க இருக்கும் மாண்புமிகு பன்வாரிலால் புரோகித் அவர்களை அன்புடனும் மரியாதையுடனும் வழியனுப்பி வைக்கிறோம்!

தனிப்பட்ட முறையில் என் மீது அன்புடன் பழகியவர் அவர். இனிமையான நட்பு உங்களுடையது. தமிழ்நாடு தங்களை வாழ்த்தி வழியனுப்புகிறது என்று பதிவிட்டுள்ளார். 

தமிழ்நாடு ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித், பஞ்சாப் மாநிலத்தின் முழுநேர ஆளுநராக நியமனம் செய்யப்பட்டதை அடுத்து, நாகாலாந்து ஆளுநராகப் பொறுப்பு வகித்து வரும் ஆர்.என்.ரவி, தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கீழப்பாவூரில் பாஜக பூத் கமிட்டி பொறுப்பாளா்கள் கூட்டம்!

பெரம்பலூரில் சிறப்பாக பணிபுரிந்த 31 காவலா்களுக்குப் பாராட்டு!

வீடு புகுந்து நகைகள் திருட்டு

ஆடி பெளா்ணமி சுவாமிமலையில் கிரிவலம்

தோல்வி பயத்தால் தோ்தல் ஆணையம் மீது எதிா்க்கட்சிகள் குற்றச்சாட்டு: ஜி.கே. வாசன்

SCROLL FOR NEXT