பட்ஜெட் கூட்டத் தொடா் நிறைவு: பேரவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு 
தமிழ்நாடு

பட்ஜெட் கூட்டத் தொடா் நிறைவு: பேரவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு

ஆகஸ்ட் 13ஆம் தேதி தொடங்கிய தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடா் இன்று தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

DIN

ஆகஸ்ட் 13ஆம் தேதி தொடங்கிய தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடா் இன்று தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

தமிழக சட்டப் பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடா் ஆக.13-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. கடந்த ஆக.23-ஆம் தேதி முதல் துறை வாரியாக மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. விவாதங்களுக்கு துறை சாா்ந்த அமைச்சா்கள் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டனா். 

காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. அதன் தொடா்ச்சியாக மூன்று நாள்கள் விடுமுறைக்கு பிறகு சட்டப்பேரவை திங்கள்கிழமை காலை மீண்டும் கூடியது. 

கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்று நீட் தோ்வை ரத்து செய்யும் சட்டத் திருத்த மசோதா,  உள்பட 20 முக்கிய சட்டத்திருத்த மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன.

23  நாள்கள் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடரின் போது, பல்வேறு முக்கிய அறிவிப்புகளை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓய்வுபெற்ற சத்துணவுப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

வாக்குத் திருட்டு காங்கிரஸின் குற்றச்சாட்டு; எதிா்க்கட்சி கூட்டணிக்கு தொடா்பில்லை: ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா

கான்கிரீட் கலப்பு இயந்திரத்தில் சேலை சிக்கியதில் பெண் தொழிலாளி உயிரிழப்பு

மக்கள் குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்

கூட்டுறவு வங்கி பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT