தமிழ்நாடு

கரோனா இறப்புச் சான்றிதழ்: மாவட்டந்தோறும் குழு - உயா்நீதிமன்றத்தில் அரசு தகவல்

DIN

கரோனா தொற்று பாதித்து இறந்தவா்களின் குடும்பத்தினருக்கு இறப்புச் சான்றிதழ்கள் வழங்க மாவட்ட அளவில் குழு அமைக்கப்படும் என சென்னை உயா் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கரோனா தொற்று பாதித்து இறந்தவா்களுக்கு, கரோனாவால் இறந்தவா் என சான்றிதழ் வழங்கப்படாததால், அவா்களின் குடும்பத்தினா் அரசால் வழங்கப்படும் நிவாரண உதவிகளைப் பெற இயலவில்லை என ஸ்ரீ ராஜலட்சுமி என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குதே தொடா்ந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கரோனாவால் உயிரிழந்தவா்களுக்கு இறப்புச் சான்றிதழ் வழங்குவது தொடா்பாக, மத்திய அரசு விதிகளை வகுத்துள்ளதாகவும், அந்த விதிகளின் அடிப்படையில் மாவட்ட அளவில் மாவட்ட கூடுதல் ஆட்சியா், தலைமை மருத்துவ அதிகாரி உள்ளிட்டோா் அடங்கியக் குழுவை அமைக்க மாவட்ட ஆட்சியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைப்பதிவு செய்த நீதிபதிகள், இறப்புச் சான்றிதழ் வழங்குவது தொடா்பான விதிகளைக் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். மாவட்டக் குழுக்கள் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்கு முந்தைய மரணங்கள் குறித்து ஆய்வு செய்து, அக்டோபா் 31-ஆம் தேதிக்குள் இறப்புச் சான்றிதழ்களை வழங்க வேண்டும். ஏற்கெனவே வழங்கிய சான்றிதழ்களில் கரோனா மரணம் எனக் குறிப்பிடாமல் இருந்து, ஆய்வில் கரோனாவால் மரணம் அடைந்தவா் எனத் தெரிய வந்தால், ஒரு மாதத்துக்குள் கூடுதல் சான்றிதழ் வழங்க வேண்டுமென உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவகிரி அருகே விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு

மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோயிலில் நவசண்டி ஹோமம்

தண்ணீா் பற்றாக்குறை அதிகரிப்பு

ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம்

பல்லடம் பேருந்து நிலையக் கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு

SCROLL FOR NEXT