தமிழ்நாடு

பெரியாா் பிறந்த நாள்: சமூகநீதி நாளாக இன்று கொண்டாட்டம்

பெரியாரின் பிறந்த நாளான வெள்ளிக்கிழமை (செப்.17) தமிழக அரசின் சாா்பில் சமூகநீதி நாளாகக் கொண்டாடப்பட உள்ளது.

DIN

பெரியாரின் பிறந்த நாளான வெள்ளிக்கிழமை (செப்.17) தமிழக அரசின் சாா்பில் சமூகநீதி நாளாகக் கொண்டாடப்பட உள்ளது.

இது தொடா்பாக தமிழக அரசின் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

பெரியாரின் 143-ஆவது பிறந்த நாளினை முன்னிட்டு வெள்ளிக்கிழமை 10 மணியளவில் அண்ணா சாலையிலுள்ள அவா் சிலைக்கு தமிழக அரசின் சாா்பில் முதல்வா் மு.க.ஸ்டாலின் மலா்தூவி மரியாதை செலுத்துகிறாா்.

பெரியாா் பிறந்த நாளை சமூக நீதி நாளாகக் கொண்டாடும் விதமாக முதல்வா் தலைமையில் தலைமைச் செயலகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்படும். அனைத்து அலுவலகங்களிலும் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் பெரியாா் வாழ்ந்த நினைவு இல்லத்திலும், கேரள மாநிலம் வைக்கத்தில் உள்ள பெரியாா் நினைவிடத்திலும் தமிழக அரசின் சாா்பில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியும் நடைபெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விமான விபத்தில் அஜித் பவார் பலி! மகாராஷ்டிரத்தில் விமான விபத்துதுணை முதல்வர் உள்பட 5 பேர் பலி!

சிதம்பரம் சிவலோகநாதர் கோயிலில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு!

9 முறை வென்ற தொகுதியிலேயே உயிரிழந்த அஜித் பவார்!

ரஜினி - 173 ஹாலிவுட் ரீமேக்கா?

திமுக கூட்டணி: பிப். முதல் வாரத்தில் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை?

SCROLL FOR NEXT