தமிழ்நாடு

கே.சி. வீரமணிக்கு சொந்தமான எந்தெந்த இடங்களில் சோதனை?

DIN


திருப்பத்தூர், ஜோலார்பேட்டையில் மட்டும் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணிக்கு சொந்தமான 15 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

வேலூர், திருப்பத்தூர் (ஜோலார்பேட்டை) திருவண்ணாமலை, சென்னை உள்ளிட்ட 28 இடங்களில் கே.சி. வீரமணி மற்றும் அவரது உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடைபெற்று வருகிறது. வீரமணி வீட்டின் முன்பு ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் பலர் திரண்டுள்ளனர்.

திருப்பத்தூர் மற்றும் ஜோலார்பேட்டை பகுதிகளில் மட்டும் சுமார் 15 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

  1. திருப்பத்தூர் கிருஷ்ணகிரி செல்லும் சாலையில் அமைந்துள்ள ஹோட்டல் ஹில்ஸ் 
  2. ஏலகிரி மலையில் அமைந்துள்ள ஹோட்டல் ஹில்ஸ்
  3. ஜோலார்பேட்டை காந்தி ரோட்டில் அமைந்துள்ள வீடு
  4. பழைய ஜோலார்பேட்டை நாட்றம்பள்ளி சாலையில் அமைந்துள்ள மற்றொரு வீடு 
  5. அவரது தம்பி காமராஜ் வீடு
  6. அவரது அண்ணன் அழகிரி வீடு
  7. அவரது குடும்பத்தைச் சார்ந்த பிடி மண்டி 
  8. தமலேரிமுத்தூர் பகுதியைச் சேர்ந்த முன்னாள் ஒன்றியச் செயலாளர் ரமேஷ் வீடு
  9. திருப்பத்தூரில் அமைந்துள்ள முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ரமேஷ் வீடு
  10. ஏலகிரி கிராமத்தில் அமைந்துள்ள மகளிர் அணித் தலைவி சாந்தி வீடு
  11. ஜோலார்பேட்டை நாட்றம்பள்ளி செல்லும் சாலையில் அமைந்துள்ள திருமண மண்டபம்
  12. நாட்றம்பள்ளி மல்லகுண்ட பகுதியைச் சேர்ந்த மாவட்டப் பொருளாளர் ராஜா என்பவரது வீடு
  13. நாட்றம்பள்ளி பகுதியைச் சார்ந்த ஒன்றியச் செயலாளர் சாமராஜ் வீடு
  14. நாட்றம்பள்ளி கத்தாரி பகுதியைச் சேர்ந்த குட்லக் ரமேஷ் 
  15. ஜோலார்பேட்டை நகரச் செயலாளர் சீனிவாசன் வீடு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

SCROLL FOR NEXT