தமிழ்நாடு

பம்பர் பொருத்துவதற்கான தடை தொடரும்: சென்னை உயர்நீதிமன்றம்

DIN

நான்கு சக்கர வாகனங்களில் பம்பர் பொருத்துவதற்கான தடை தொடரும் என சென்னை உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

கார் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்களில் பம்பர் பொருத்தப்படுவதால் விபத்து ஏற்படும் போது ஏர்பேக் செயல்படாமல் உயிரிழப்பு ஏற்படுவதாக கூறி பம்பர் பொருத்துவதற்கு மத்திய அரசு தடை விதித்திருந்தது.

இந்த தடையை எதிர்த்து பம்பர் தயாரிப்பு நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் கூறியது:

“கார் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்களில் பம்பர் பொருத்த தடை விதித்திருப்பது மத்திய அரசின் கொள்கை முடிவு. அதில், நீதிமன்றம் தலையிட முடியாது. ஏர்பேக் செயல்படாததன் காரணமாகவே தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனவே, பம்பருக்கான தடை தொடர்ந்து அமலில் இருக்கும். மத்திய அரசு விதித்துள்ள தடையை மாநில அரசுகள் கடுமையாக பின்பற்ற வேண்டும்.”

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீரர்கள் விளையாடுவார்களா? மழை விளையாடுமா?

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் 7 பேர் கைது

ஐசிஐசிஐ வங்கி முன்னாள் தலைவர் நாராயணன் வாகுல் காலமானார்

பயிர்களில் அதிகளவில் ரசாயன பயன்பாடு: கட்டுப்படுத்த தவறியதா அரசு? உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

ரே பரேலி அல்ல, ராகுல் பரேலி!

SCROLL FOR NEXT