தமிழ்நாடு

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலர் முறைகேடாக நகைக்கடன்: பணத்தை வசூலிக்க உத்தரவு

கடன் தள்ளுபடிக்காக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலர், வெவ்வேறு கூட்டுறவு வங்கிகளில் நகைகளை அடகு வைத்திருப்பது தெரியவந்துள்ளதை

DIN


சென்னை: கடன் தள்ளுபடிக்காக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலர், வெவ்வேறு கூட்டுறவு வங்கிகளில் நகைகளை அடகு வைத்திருப்பது தெரியவந்துள்ளதை அடுத்து, முறைகேடாக நகைக்கடன் பெற்றவர்களிடம் இருந்து பணத்தை திருப்பி வசூலிக்க அனைத்து மண்டல பதிவாளர்களுக்கும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். 

இதுதொடர்பாக அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், குடும்ப அட்டையில் பெயர் உள்ளவர்கள் பலர், கடன் தள்ளுபடிக்காக, ஒன்றுக்கு மேற்பட்ட கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றுள்ளது  தெரியவந்துள்ளது. எனவே, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலர் நகைக்கடன் பெற்றிருந்தாலும் 5 சவரனுக்கு மேலான கடனுக்கான தொகையை வசூல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. 

நகைக்கடன் தவணை தவறி இருப்பின் உரிய சட்டப்பூர்வ நடவடிக்கைகளை பின்பற்றி தொகையை வசூல் செய்யுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்ஜெட் - நிதியமைச்சர் கவனத்துக்கு...

போக்குவரத்து விழிப்புணா்வு பேரணி

உழவினார் கைம்மடங்கின்...

4-வது பொதிகை புத்தகத் திருவிழாவுக்கு சுவா் ஓவியம் வரைந்து அழைப்பு!

சங்கரன்கோவில் விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம்!

SCROLL FOR NEXT