திருச்சி ஐஜி அலுவலகத்தில் பரபரப்பு: 2 பேர் தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி
திருச்சி ஐஜி அலுவலகத்தில் வியாழக்கிழமை காலை இருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
திருச்சி ஐஜி அலுவலகத்தில் வியாழக்கிழமை காலை இருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
பெரம்பலூர் மாவட்டம், துரைமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ராஜு, இவருடைய உறவினர் சிவநடராஜன் இருவரும் வியாழக்கிழமை திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள மத்திய மண்டல ஐ.ஜி அலுவலகம் வந்தனர். பின்னர் திடீரென அலுவலகம் முன், தங்களது உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றனர். இதனை அடுத்து அங்கிருந்த போலீசார் ஓடிச்சென்று அவர்களை தடுத்து நிறுத்தி , தண்ணீரை ஊற்றி தற்கொலை முயற்சியை கைவிடச் செய்தனர்.
இது குறித்து அவர்களிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அவர்கள் சிலரிடம் வட்டிக்கு பணம் வாங்கி இருந்த நிலையில் அதற்கு ஈடாக தங்களது நிலத்தை கொடுத்துள்ளனர். கடனை திருப்பி செலுத்திய நிலையிலும் நிலத்தை திருப்பி தரவில்லையாம்.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்ககோரி புகார் அளித்து 2 ஆண்டு காலமாக பெரம்பலூர் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனை கண்டித்து தீக்குளிக்க முயன்றதாக கூறியுள்ளனர்.
மேலும் கே.கே.நகர் போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.