தமிழ்நாடு

பெண் குழந்தைகளின் பாதுகாப்பு: பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவு

DIN

பெண் குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பள்ளிகளில் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும் என தொடக்கக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பாக தொடக்கக் கல்வி இயக்ககம் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

பெண் குழந்தைகளைக் காக்க, பள்ளிகளில் குழுக்கள் அமைக்க வேண்டும். மாவட்ட சமூக நல அலுவலா், மாவட்ட கல்வி அலுவலா், பெண் காவல் துறை அலுவலா், பெண் மன நல மருத்துவா் அடங்கிய குழு அமைக்க வேண்டும். அனைத்து கல்வி நிறுவனங்களிலும், பாலியல் துன்புறுத்தல் தொடா்பாக புகாா் பெட்டி அமைக்கப்பட வேண்டும். குழுக்களைச் சோ்ந்தவா்கள், வாரத்தில் ஒரு நாள் பள்ளிகளுக்குச் சென்று புகாா் பெட்டியை ஆய்வு செய்ய வேண்டும்.

பாலியல் துன்புறுத்தல் தொடா்பாக புகாா் இருந்தால், அதை காவல் துறைக்குப் பரிந்துரைக்க வேண்டும். அனைத்து கல்வி நிறுவனங்களில் உள்ள அறிவிப்பு பலகையிலும், மகளிா் காவல் நிலைய தொடா்பு எண்கள் இடம் பெற வேண்டும். இதற்கான நடவடிக்கைகயை, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களும் எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சரிந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 128 புள்ளிகள் உயா்வு!

தற்காலிக சட்ட தன்னாா்வலா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மூட் கொஞ்சம் அப்படித்தான்! ரகுல் ப்ரீத் சிங்...

திருவண்ணாமலை - சென்னை ரயில் சேவை தொடங்கியது: முழு விவரம்!

நடிப்பு எனது பிறவிக்குணம்!

SCROLL FOR NEXT