சங்ககிரி அருள்மிகு சென்னகேசவப்பெருமாள் உடனமர் ஸ்ரீதேவி, ஸ்ரீ பூதேவி சுவாமிகளின் உற்ச மூர்த்திகளுக்கு 2வது சனிக்கிழமையொட்டி செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம். 
தமிழ்நாடு

புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை: சங்ககிரி பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜைகள்

சேலம் மாவட்டம், சங்ககிரி சுற்றியுள்ள பெருமாள் கோயில்களில் புரட்டாசி மாத 2-வது வார சனிக்கிழமையொட்டி சிறப்பு  பூஜைகள் நடைபெற்றது. 

DIN


சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி சுற்றியுள்ள பெருமாள் கோயில்களில் புரட்டாசி மாத 2-வது வார சனிக்கிழமையொட்டி சிறப்பு  பூஜைகள் நடைபெற்றது. 

சங்ககிரி மலையில் உள்ள அருள்மிகு சென்னகேசவப்பெருமாள் உடனமர் ஸ்ரீதேவி,  ஸ்ரீபூதேவி கோயில், வி.என்.பாளையத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ வஸந்தவல்லி உடனமர் ஸ்ரீ வஸந்தவல்லபராஜப்பெருமாள்  கோயில்,  ஒருக்காமலையில் உள்ள குடைவரை கோயிலில் உள்ள அருள்மிகு வரதராஜ பெருமாள் பாதங்கள், திருநாமங்களான சங்கு, சக்கரங்களுக்கும், வடுகப்பட்டியில் உள்ள அருள்மிகு சென்றாயப்பெருமாள் சுவாமிகளுக்கும் 2வது வார சனிக்கிழமையொட்டி அதிகாலையிலேயே பால், தயிர், மஞ்சள், திருமஞ்சனம், சந்தனம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள்  செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. 

புரட்டாசி 2வது வார சனிக்கிழமையையொட்டி சங்ககிரி மலை மீது  உள்ள அருள்மிகு சென்னகேசவப்பெருமாள் உடனமர் ஸ்ரீதேவி, ஸ்ரீ பூதேவி கோயில் வளாகத்தில் அதிகாலை ஏற்றப்பட்ட திருக்கோடி விளக்கு.

பின்னர் சங்ககிரி வி.என்.பாளையத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ வஸந்தவல்லி உடனமர் ஸ்ரீ வஸந்தவல்லபராஜப் பெருமாள் சுவாமிகள், அதே கோயில் வளாகத்தில் உள்ள அருள்மிகு சென்னகேசவ பெருமாள் உடனமர் ஸ்ரீதேவி, ஸ்ரீ பூதேவி சுவாமிகளின் உற்ச மூர்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. 

சங்ககிரி மலை மீது உள்ள அருள்மிகு சென்னகேவசப்பெருமாள் கோயிலில் அதிகாலையில் கோயில் அர்ச்சகர்களால் திருக்கோடி விளக்கு ஏற்றப்பட்டது.  

கரோனா தொற்று பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கையையொட்டி இந்து சமய அறநிலையத்துறை வழிகாட்டுதலின் படி கோயில் அர்ச்சகர்கள் மட்டுமே அனைத்து கோயில்களிலும் பூஜைகளை செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விராலிமலை: விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்

பாகிஸ்தான்: வெடிகுண்டு தாக்குதலில் இருந்து தப்பிய எக்ஸ்பிரஸ் ரயில்

நாகையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

மனோதைரியம் கூடும் இவர்களுக்கு: தினப்பலன்கள்!

மேலப்பாளையத்தில் நாளை மின்நிறுத்தம்

SCROLL FOR NEXT