ஊரக உள்ளாட்சித் தேர்தல் ஏற்பாடுகள்: தமிழக தேர்தல் ஆணையர் ஆலோசனை 
தமிழ்நாடு

ஊரக உள்ளாட்சித் தேர்தல் ஏற்பாடுகள்: தமிழக தேர்தல் ஆணையர் ஆலோசனை

தேர்தல் அலுவலர்கள் / மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோருடன் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் வெ. பழனிகுமார் ஆலோசனை நடத்தினார்.

DIN


சென்னை: ஊரக உள்ளாட்சித் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக, 37 மாவட்ட தேர்தல் அலுவலர்கள் / மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோருடன் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் வெ. பழனிகுமார் ஆலோசனை நடத்தினார்.

காணொலி காட்சி வாயிலாக  நடைபெற்ற இக் கூட்டத்தில், ஊரக உள்ளாடசித் தேர்தலை அமைதியாக நடத்துவதற்கு கீழ்க்கண்ட பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட்டு அறிவுரைகள் வழங்கப்பட்டன.

  • வாக்குச்சாவடி மையங்கள் மற்றும் வாக்கு எண்ணும் மையக்ஙளில்கரோனா பரவலை தடுக்க கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள்.
     
  • அனைத்து வாக்குப்பதிவு அலுவலர்கள் மற்றும் தேர்தல் அலுவலர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதை உறுதி செய்தல்.
     
  • வாக்குச்சாவடிச் சீட்டு வாக்காளர்களுக்கு விநியோகம் செய்தல்.
     
  • மாதிரி நன்னடத்தை விதிகளை தவறாது கடைப்பிடித்தல் - விதிமீறல் இனங்கள் குறித்த அறிக்கை.
     
  • பறக்கும் படையினரால் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் மதுபானம் குறித்த அறிக்கை.
     
  • வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி அமைத்தல்.
     
  • வாக்கு எண்ணுகை மையத்தில் பாதுகாப்பு அறைக்கு சிசிடிவி அமைத்தல்

    ள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது என்று மாநில தேர்தல்  ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வைகை அணையில் பேரிடா் மீட்புப் பணி ஒத்திகை

காலிறுதியில் சிந்து, துருவ்/தனிஷா

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு

பைக் விபத்தில் முதியவா் உயிரிழப்பு

வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

SCROLL FOR NEXT