கனமழை: சீர்காழி வட்டத்தில் இதுவரை 83 வீடுகள் இடிந்து சேதம், 53 கால்நடைகள் இறப்பு
தமிழகத்தில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழைக்கு சீர்காழி வட்டத்தில் இதுவரை 83 வீடுகள் இடிந்து விழுந்து சேதம்டைந்துள்ளது.
சீர்காழி: தமிழகத்தில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழைக்கு சீர்காழி வட்டத்தில் இதுவரை 83 வீடுகள் இடிந்து விழுந்து சேதம்டைந்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த சில தினங்களாக சீர்காழி பகுதியில் தொடர்ந்து மழை பெய்துவருகிறது. இதனால் சீர்காழி வட்டாரத்தில் சுமார் 20 ஆயிரம் ஏக்கரில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது.
இதையும் படிக்க | சீர்காழியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து கல்லூரி மாணவன் காயம்
Advertisement
வடகிழக்கு பருவமழைக்கு சீர்காழியில் கூரை வீடு இடிந்து விழுந்ததில் காயமடைந்த முதியவர்.
மேலும் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது.
இதனிடையே சீர்காழி,கொள்ளிடம் உள்ளிட்ட பகுதிகளில் இந்த கனமழைக்கு 74 கூரைவீடுகள் இடிந்து பகுதி சேதம் ஏற்பட்டுள்ளது. அதே போல் 9 ஓட்டு வீடுகள் இடிந்து சேதமாகியுள்ளது.
இதையும் படிக்க | கண்ணூர்-யஷ்வந்த்பூர் பயணிகள் ரயில் மலைப்பாதையில் தடம் புரண்டது
தொடர்மழையால் 29 ஆடுகள், 3ஆட்டுகுட்டிகள்,10 பசுமாடுகள்,11 கன்றுகள் இறந்துள்ளதாக வருவாய்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.