முகப்பு
தமிழ்நாடு

திருவொற்றியூர்: பொது நிகழ்ச்சியில் மயங்கி விழுந்தார் சீமான்

சென்னை, திருவொற்றியூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திடீரென மயங்கி விழுந்தார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:51 AM
பொது நிகழ்ச்சியில் மயங்கி விழுந்தார் சீமான்
பகிர்:


சென்னை: சென்னை, திருவொற்றியூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திடீரென மயங்கி விழுந்தார்.

சென்னை திருவொற்றியூரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமான நாம் தமிழர் கட்சி பிரமுகர்களும், தொண்டர்களும் பங்கேற்றிருந்தனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிக் கொண்டிருந்த சீமான், திடீரென மயங்கி கீழே விழுந்தார். அவருக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. 

முதலுதவி சிகிச்சையைத் தொடர்ந்து இயல்பு நிலைக்குத் திரும்பியதால், அவர் வீடு திரும்பினார். வெயில் தாக்கம் காரணமாக, சீமான் மயங்கி விழுந்ததாகவும், தற்போது அவர் நலமாக இருப்பதாகவும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →