முகப்பு
தமிழ்நாடு

அடுத்த 4 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:52 AM
கோப்புப் படம்
பகிர்:

தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும். 

ஏப்ரல் 4 முதல் 7ஆம் தேதி வரை தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, சிவகங்கை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலையாக 36 டிகிரி செல்சியஸும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் என்று குறிப்பிட்டுள்ளது. 

மீனவர்களுக்கு எச்சரிக்கை

ஏப்ரல் 6ஆம் தேதி தெற்கு அந்தமான் கடல் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே மணிக்கு 60 கிலோமீட்டர் வரையிலும் காற்று வீசக்கூடும் என்று எச்சரித்துள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →