தமிழ்நாடு

சாத்தனூர் அணையிலிருந்து 45 நாள்களுக்கு தண்ணீர் திறந்துவிட உத்தரவு

DIN

திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் அடுத்த 45 நாள்களுக்கு தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

வருகிற ஏப்ரல் 4 ஆம் தேதி முதல் மே 19 ஆம் தேதி வரை 166.40 மி.க.அடி தண்ணீர் திறந்து விட உத்தரவிடப்பட்டுள்ளது. 

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், சாத்தனூர் அணையிலிருந்து 2021-2022 ஆம் ஆண்டிற்கு சாத்தனூர் இடது மற்றும் வலதுபுறக் கால்வாய்களின் ஏரிகளுக்கு நாள் ஒன்றுக்கு முறையே 140 க.அடி/வினாடி மற்றும் 160 க.அடி/வினாடி வீதம் மொத்தம் 300 கனஅடி/வினாடி தண்ணீரை 04.04.2022 முதல் 19.05.2022 வரை 45 நாள்களுக்கு தொடர்ச்சியாக 1166.40 மி.க. அடி தண்ணீர் திறந்து விடவும்,

திருக்கோவிலூர் பழைய ஆயக்கட்டு நிலங்களுக்கு உரிமை நீர் 800 மி.க.அடி நீரினை நீர் பங்கீடு விதிகளின்படி ஏப்ரல் 30-க்குள் விவசாயிகளின் கோரிக்கைப்படி தேவைப்படும்பொழுது மூன்று தவணைகளில் சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடவும் அரசு ஆணையிட்டுள்ளது.

இதனால் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலுள்ள 12,543 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில வா்த்தக அணி தென் மண்டல பயிலரங்கம்

மரண வியாபாரிகள்!

பிளஸ் 2 தோ்வு தென்காசி எம்கேவிகே.மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்

தென்காசி ரயில் நிலையம் அருகே தங்கியிருந்த முதியவா்கள் முதியோா் இல்லத்தில் ஒப்படைப்பு

பிரதமா் பேச்சுக்கு எதிா்ப்புத் தெரிவித்து அளித்த புகாருக்கு ரசீது கோரி டிஎஸ்பியிடம் மனு

SCROLL FOR NEXT