தமிழ்நாடு

முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த நடிகர் விஜய்: வைரலாகும் படங்கள்

முதல்வர் மு.க.ஸ்டாலினும் நடிகர் விஜய்யும் நேரில் சந்தித்துக்கொண்டனர்.

DIN

சினிமா தயாரிப்பாளர் இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலினும் நடிகர் விஜய்யும் நேரில் சந்தித்துக்கொண்டனர். நிகழ்ச்சியில் எதேர்ச்சையாக நடந்த இந்த சந்திப்பில் இருவரும் ஒருவரை ஒருவர் கைக்குலுக்கி நலம் விசாரித்துக்கொண்டனர். 

ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரான கல்பாத்தியின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் இன்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். 

தளபதி 66 பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்று படப்பிடிப்பை தொடக்கி வைத்த நடிகர் விஜய்யும் இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலினை நடிகர் விஜய் நேரில் சந்தித்தார். இருவரும் ஒருவரை ஒருவர் வரவேற்று கைக்குலுக்கி நலம் விசாரித்துக்கொண்டனர். 

திரைப்படத் தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரமின் மகள் ஐஸ்வர்யா கல்பாத்தி மற்றும் ராம் ரத்தன் ராயின் மகன் ராகுல் ராய் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கரில் 29 நக்சல்கள் சரண்!

பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியம் உயர்வு! அமைச்சர் அன்பில் மகேஸ்

ரோட்டர்டம் திரைப்பட விழாவுக்குத் தேர்வான பராசக்தி!

பஞ்சாப் முதல்வரின் வெளிநாட்டுப் பயணத்திற்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு!

டிரம்ப், நெதன்யாகுவுக்கு சவப்பெட்டி... ஈரானுக்கு ஆதரவாக லடாக்கில் போராட்டம்!

SCROLL FOR NEXT