தமிழ்நாடு

உள்ளாட்சித் தேர்தல் முடிந்ததும் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது: எடப்பாடி பழனிசாமி

DIN

சென்னை: சொத்து வரி உயர்வு குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அளித்த விளக்கத்தை ஏற்க மறுத்து, சட்டப்பேரவையிலிருந்து அதிமுக, பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

சட்டப்பேரவைக்கு வெளியில் வந்த எம்எல்ஏக்கள் அனைவரும், சொத்து வரி உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.

சொத்து வரி உயர்வை திரும்பப் பெறுவது குறித்து பரிசீலனை செய்யுமாறு எதிர்க்கட்சிகள் கோரிய நிலையில், சொத்து வரி உயர்வை மனமுவந்து செய்யவில்லை என்றும், தவிர்க்க முடியாது என்பதால் மக்கள் துணை நிற்க வேண்டும் என்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

முதல்வரின் விளக்கத்தை ஏற்க மறுத்தும், சொத்து வரி உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தியும் அதிமுக, பாஜக உறுப்பினர்கள் சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

பேரவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, சொத்து வரியை உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசு எந்த இடத்திலும் சொல்லவில்லை. உள்ளாட்சித் தேர்தல் முடிந்ததும் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது என்று கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏழுமலையான் தரிசனத்துக்கு 12 மணி நேரம் காத்திருப்பு

சா்வதேச ஸ்கேட்டிங்: தங்கம் வென்ற சிவகங்கை வீரா்களுக்குப் பாராட்டு

கல்லல் ஊராட்சியில் நீா் மோா் பந்தல் திறப்பு

ஆம்பூரில் ரூ. 10 லட்சத்தில் மின்மாற்றி அமைப்பு

குடிநீா்த் தட்டுப்பாடு குறித்து கருத்து தெரிவித்தவருக்கு கொலை மிரட்டல்

SCROLL FOR NEXT