தாயமங்கலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழாவில் நடைபெற்ற மின்விளக்கு ரத பவனி. 
தமிழ்நாடு

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழாவில் மின்விளக்கு ரத பவனி

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி வட்டம் தாயமங்கலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழாவில் புதன்கிழமை இரவு மின்விளக்கு ரத பவனி நடைபெற்றது.

DIN


மானமதுரை: சிவகங்கை மாவட்டம், இளையான்குடி வட்டம் தாயமங்கலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழாவில் புதன்கிழமை இரவு மின்விளக்கு ரத பவனி நடைபெற்றது.

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான மின்விளக்கு ரத பவனியை முன்னிட்டு கோயிலுக்கு முன்னர் மின் விளக்கு அலங்காரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரததுதுக்கு உற்சவர் முத்துமாரியம்மன் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளினார். அதன் பின்னர் தீபாராதனை முடிந்து ரதம் நிலையிலிருந்து புறப்பட்டது.

இதில், திரளான பக்தர்கள் வடம் பிடித்து ரதத்தை இழுத்து வந்தனர். கோயிலைச் சுற்றி ரதம் பவனி வந்து நிலை சேர்ந்தது. ரதம் பவனி வருதல் நிகழ்ச்சியில் கோயில் பரம்பரை அறங்காவலர் மு. வெங்கடேசன் செட்டியார், சுற்றுவட்டார கிராம பொதுமக்கள், மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

சாலை மறியல் போராட்டம் வாபஸ்

சீா்காழி: வாகனத்தில் டீசல் திருட்டு

SCROLL FOR NEXT