முகப்பு
தமிழ்நாடு

‘அரசியல் தலைவர்களை விமர்சிக்கக் கூடாது’: நடிகர் விஜய்

அரசுப் பதவியில் உள்ளவர்கள், அரசியல் தலைவர்களை விஜய் மக்கள் இயக்கத்தினர் விமர்சிக்கக் கூடாது என்று நடிகர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:54 AM
நடிகர் விஜய்
பகிர்:

அரசுப் பதவியில் உள்ளவர்கள், அரசியல் தலைவர்களை விஜய் மக்கள் இயக்கத்தினர் விமர்சிக்கக் கூடாது என்று நடிகர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெட்ஜ் நடித்துள்ள ‘பீஸ்ட்’ திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளன. இந்த படத்தின் பாடல்கள், டிரைலர் ஆகியவை பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளன.

இந்நிலையில், விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்ட செய்தியில்,

“அரசுப் பதவிகளில் உள்ளோர்களை, அரசியல் கட்சித் தலைவர்களை, மற்றும் யாரையும் எக்காலத்திலும் இழிவுபடுத்தும் வகையில் பத்திரிகைகளில், இணையதளங்களில், போஸ்டர்களில் என எந்த தளத்திலும் எழுதவோ, பதிவிடவோ, மீம்ஸ் உள்ளிட்ட எதனையும், இயக்கத்தினர் வெளியிடக் கூடாது.

இது நம் விஜய்யின் கடுமையான உத்தரவின்பேரில், ஏற்கெனவே பலமுறை இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு அறிவுறுத்தி இருந்தோம். அதனை மீறுவோர் மீது நடவடிக்கைகள் மேற்கொண்டதோடு, இயக்கத்தை விட்டு நீக்கியும் உள்ளோம். இருப்பினும், நம் விஜய் அறிவுறுத்தலை, மீண்டும் யாரேனும் மீறினால் இனி அவர்களை இயக்கத்தைவிட்டு நீக்குவதோடு, அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதை விஜய் உத்தரவின் பேரில் இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு தெரியப்படுத்திக்கொள்கிறேன்.” இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை திருமண நிகழ்வு ஒன்றில் நடிகர் விஜய் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.