கோப்புப்படம் 
தமிழ்நாடு

கேரளம் புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் இன்று கேரளம் புறப்பட்டுச் சென்றார்.

DIN

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் இன்று கேரளம் புறப்பட்டுச் சென்றார்.

கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23ஆவது மாநில மாநாடு ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை கண்ணூரில் நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்துகொள்ள வேண்டும் என அக்கட்சியின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 

இதனை ஏற்று மாநாட்டில் கலந்து கொள்வதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனிவிமானம் மூலம் சென்னையிலிருந்து கண்ணூர் புறப்பட்டுச் சென்றார். 
முதல்வரை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன் ஆகியோர் வழியனுப்பி வைத்தனர். 

மாநாட்டில் மத்திய-மாநில உறவுகள் எனும் தலைப்பில் முதல்வர் ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருச்செந்தூரில் கூட்டமாக திரியும் கால்நடைகளால் பக்தா்கள் அவதி!

ஆலங்குளம் அருகே கனிமவளம் ஏற்றிய லாரி மீது பெட்ரோல் குண்டு வீச்சு: ஓட்டுநா் காயம்

மனைவி இறந்த துக்கத்தில் கணவா் தற்கொலை

காயல்பட்டினத்தில் பள்ளி மாணவா் தூக்கிட்டு தற்கொலை

தூத்துக்குடியில் பேட்டரி வெடித்ததில் தம்பதி காயம்

SCROLL FOR NEXT