தமிழ்நாடு

வேளாங்கண்ணியில் குருத்தோலை ஞாயிறு பவனி ஊர்வலம் 

DIN

நாகப்பட்டினம்: உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி  புனித ஆரோக்கிய அன்னைப் பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு பவனி ஊர்வலம் மற்றும் சிறப்பு வழிபாடுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இயேசு கிறிஸ்து 40 நாள்கள் உபவாசம்  இருந்ததை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் கிறிஸ்தவர்கள் 40 நாள்கள் தவக்காலம் கடைப்பிடிக்கின்றனர். இதன்படி, கீழை நாடுகளின் லூர்து என்று அழைக்கப்படும் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னைப் பேராலயத்தில்  தவக்கால சிறப்பு வழிபாடுகள் பிப்ரவரி 2-ஆம் தேதி சாம்பல் புதனுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

பேராலயத்தில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகள்.

இந்த தவக்கால நிகழ்வுகளில் ஒன்றான குருத்தோலை ஞாயிறு பவனி ஊர்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, பேராலயத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. தொடர்ந்து காலை 7  மணியளவில் குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது.

பவனி ஊர்வலத்தை பேராலய அதிபர் சி. இருதயராஜ் தொடங்கி வைத்தார். பேராலய முகப்பில் தொடங்கிய பவனி ஊர்வலமானது பேராலய வீதிகளில் வலம் வந்து 7.20 மணிக்கு கலையரங்கில் நிறைவடைந்தது.

குருத்தோலைகளை கையில் பிடித்தப்படி ஜெப மாலைகள் பாடி ஊர்வலமாகச் சென்றனர்.

இதில், திரளானோர் பங்கேற்று குருத்தோலைகளை கையில் பிடித்தப்படி ஜெப மாலைகள் பாடி ஊர்வலமாகச் சென்றனர். தொடர்ந்து, தமிழ், ஆங்கிலம் தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் திருப்பலிகள் நிறைவேற்றப்பட்டன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீடு தேடி வந்தவள்

பிச்சைப் பாத்திரத்தை கையில் ஏந்தியுள்ளது பாகிஸ்தான் -பிரதமர் மோடி விமர்சனம்

5-ஆம் கட்ட தோ்தல்: ரே பரேலி உள்பட 49 தொகுதிகளில் பிரசாரம் முடிந்தது

சிஎஸ்கே பந்துவீச்சு; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

சித்தார்த்தின் யசோதரை!

SCROLL FOR NEXT