மானாமதுரை சித்திரை திருவிழாவில் கால்பிரிவு மண்டகப்படியில் குதிரை வாகனத்தில் எழுந்தருளி அருள் பாலித்த பிரியாவிடை சமேத சோமநாதர் சுவாமி 
தமிழ்நாடு

மானாமதுரை சித்திரை திருவிழா: இரட்டைக் குதிரை வாகனங்களில் பவனி

சித்திரை திருவிழாவில் கடந்த திங்கள்கிழமை இரவு இரட்டைக் குதிரை வாகனத்தில் ஆனந்தவல்லி அம்மனும் சோமநாதர் சுவாமியும் எழுந்தருளி பவனி வருதல் நடைபெற்றது.

DIN

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் நடைபெற்று வரும் சித்திரை திருவிழாவில் கடந்த திங்கள்கிழமை இரவு இரட்டைக் குதிரை வாகனத்தில் ஆனந்தவல்லி அம்மனும் சோமநாதர் சுவாமியும் எழுந்தருளி பவனி வருதல் நடைபெற்றது.

மானாமதுரையில் சித்திரைத் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் ஐந்தாவது நாள் மண்டகப்படியாக  கால்பிரிவு கிராமத்தார் மண்டகப்படியின் போது கோயிலுக்கு எதிரே அமைக்கப்பட்டிருந்த மண்டகப்படியில் ஆனந்தவல்லி அம்மன் குதிரை வாகனத்திலும் பிரியாவிடை சமேத  சோமநாதர் சுவாமி மற்றொரு குதிரை வாகனத்திலும் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளினர். 

மற்றொரு குதிரை வாகனத்தில் எழுந்தருளிய ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன்

அதைத் தொடர்ந்து கால்பிரிவு கிராமத்தினர் மற்றும் பக்தர்கள் அம்மனையும் சுவாமியையும் தரிசனம் செய்தனர். பூஜைகள், தீபாராதனைகள் நடை பெற்று முடிந்து இரட்டைக் குதிரை வாகனங்களில் ஆனந்தவல்லி அம்மனும் சோமநாதர் சுவாமியும் கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளில் பவனி வந்து கோயிலுக்குள் சென்றடைந்தனர்.

மானாமதுரை சித்திரை திருவிழாவில் கொட்டும் மழையில் குடை பிடித்தவாறு சுவாமி  தரிசனம் செய்ய வந்த பக்தர்கள்.

ஐந்தாவது நாள் திருவிழா மண்டகப்படி நடைபெற்ற இரவில் மழை பெய்ததால் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒருதலைக் காதல்! ஆசிரியர் மீது பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற மாணவர்!

புதிய மாடலை அறிமுகப்படுத்தியது மெர்சிடஸ் பென்ஸ்: விலை ரூ.1.35 கோடி

மசோதாவை நிறுத்திவைக்க முடிந்தால் ஆளுநரின் விருப்பப்படி அரசு செயல்படுகிறதா? - உச்சநீதிமன்றம்

தூய்மைப் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்யக் கோரிக்கை

ஆப்கன் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 78 ஆக அதிகரிப்பு!

SCROLL FOR NEXT